/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ 300 பனை மரங்கள் அழிப்பு கிராம மக்கள் கொந்தளிப்பு 300 பனை மரங்கள் அழிப்பு கிராம மக்கள் கொந்தளிப்பு
300 பனை மரங்கள் அழிப்பு கிராம மக்கள் கொந்தளிப்பு
300 பனை மரங்கள் அழிப்பு கிராம மக்கள் கொந்தளிப்பு
300 பனை மரங்கள் அழிப்பு கிராம மக்கள் கொந்தளிப்பு
ADDED : ஜூலை 28, 2024 02:58 AM
செங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பனை ஓலைப்பாடி கிராம விவசாயிகளிடம், சில மாதங்களுக்கு முன், 50 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கிய கோவை தொழிலதிபர் சுற்றுச்சுவர் அமைத்தார். அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்த போது, பாதுகாப்புக்காக அமைப்பதாக கூறினார்.
தொடர்ந்து, நிலத்தில் இருந்த கிணறுகளை மண்ணை கொட்டி மூடினர். நிலங்களில் இருந்த, 300க்கும் மேற்பட்ட பனை மரங்களை நேற்று முன்தினம் இரவோடு, இரவாக அழித்தனர். மக்கள் ஆத்திரமடைந்து நேற்று காலை நிலத்தை முற்றுகையிட்டனர். அங்குள்ளவர்களிடம் விசாரித்ததில், 'சோலார் பிளான்ட் அமைக்க எங்கள் நிலத்தை சமன் செய்கிறோம்; இதை கேட்பதற்கு நீங்கள் யார்?' எனக்கூறி அவர்களை விரட்டியடித்தனர். மக்கள் பஞ்., தலைவர் முருகனிடம் முறையிட்டனர். செங்கம் பி.டி.ஓ., அலுவலகத்தில் விசாரித்தபோது, சோலார் பிளான்ட் அமைக்க யாரும் அனுமதி கோரவில்லை என, தெரிவிக்கப்பட்டது.