/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ தீயில் சேதமான தேர் தலைமை ஸ்தபதி ஆய்வு தீயில் சேதமான தேர் தலைமை ஸ்தபதி ஆய்வு
தீயில் சேதமான தேர் தலைமை ஸ்தபதி ஆய்வு
தீயில் சேதமான தேர் தலைமை ஸ்தபதி ஆய்வு
தீயில் சேதமான தேர் தலைமை ஸ்தபதி ஆய்வு
ADDED : மார் 14, 2025 02:53 AM
வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மாசி பிரம்மோற்சவம் விழா நடந்து வருகிறது.
கடந்த, 11ம் தேதி மாலை தேரோட்டம் முடிந்து ஜலகண்டேஸ்வரர், சர்புத்திரி அம்மன் தேர் தனித்தனியாக நிலை நிறுத்தப்பட்டது.
நள்ளிரவில் இரு தேர்களும் தீப்பிடித்து எரிந்தது. வந்தவாசி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தாலும், மேற்பகுதி எரிந்து சேதமானது.
இந்நிலையில் அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி கஜேந்திரன், தேரை நேற்று ஆய்வு செய்தார். தேர் மீதேறி சேதமான பகுதியை பார்வையிட்டார்.