/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ தி.மலை பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச சோதனை தி.மலை பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச சோதனை
தி.மலை பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச சோதனை
தி.மலை பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச சோதனை
தி.மலை பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச சோதனை
ADDED : ஜூலை 08, 2024 11:47 PM

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சார் - பதிவாளர் - 2 அலுவலகத்தில், மனை வரன்முறை படுத்தப்படாத மனைகளுக்கு லஞ்சம் பெற்று பதிவு செய்யப்படுவதாக, திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் சென்றது.
அதன் படி, அங்கு நேற்று மாலை, 6:00 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது புரோக்கர் குமார் என்பவரை மடக்கி பிடித்து லஞ்சம் கொடுக்க வைத்திருந்த, 25,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
மேலும், அவர் லஞ்சமாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 'கூகுள் பே' மற்றும் ஆன்லைன் டிரான்ஸ்பர் மூலமாக பணமாக அனுப்பியது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.