/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ லாரி மீது பைக் மோதல் இரண்டு பேர் பரிதாப பலி லாரி மீது பைக் மோதல் இரண்டு பேர் பரிதாப பலி
லாரி மீது பைக் மோதல் இரண்டு பேர் பரிதாப பலி
லாரி மீது பைக் மோதல் இரண்டு பேர் பரிதாப பலி
லாரி மீது பைக் மோதல் இரண்டு பேர் பரிதாப பலி
ADDED : ஜூன் 20, 2024 02:50 AM
செங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜ விக்னேஷ், 31. இவரது நண்பர் தினகரன், 29.
கூலித் தொழிலாளிகளான இருவரும், செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் சென்றுவிட்டு, மீண்டும் திருவண்ணாமலை - பெங்களூரு சாலையில், ஒரே 'பஜாஜ்' பைக்கில் ஹெல்மெட் அணியாமல், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, பக்கிரிபாளையத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில், பைக்கில் வந்த ராஜ விக்னேஷ் மற்றும் தினகரன் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.