/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ பைக்கில் சென்ற 2 பேர் விபத்தில் பலி பைக்கில் சென்ற 2 பேர் விபத்தில் பலி
பைக்கில் சென்ற 2 பேர் விபத்தில் பலி
பைக்கில் சென்ற 2 பேர் விபத்தில் பலி
பைக்கில் சென்ற 2 பேர் விபத்தில் பலி
ADDED : ஜூலை 11, 2024 09:41 PM
செங்கம்,:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல் செங்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 31; தனியார் நிறுவன டிரைவர்.
இவரது நண்பர் சந்திரசேகர், 18; தனியார் இன்ஜினீயரிங் கல்லுாரியில், 2ம் ஆண்டு மாணவர். இருவரும் நேற்று முன்தினம் இரவு, ஹோண்டா பைக்கில் செங்கத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினர். அன்றிரவு, 11:00 மணியளவில், புதுச்சேரி - பெங்களூரு சாலையில், மேல்செங்கம் அருகே வந்தபோது, அவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேல்செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.