/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ புதுச்சேரி ரவுடியை கொன்ற 10 பேர் கைது புதுச்சேரி ரவுடியை கொன்ற 10 பேர் கைது
புதுச்சேரி ரவுடியை கொன்ற 10 பேர் கைது
புதுச்சேரி ரவுடியை கொன்ற 10 பேர் கைது
புதுச்சேரி ரவுடியை கொன்ற 10 பேர் கைது
ADDED : மார் 13, 2025 02:20 AM
வேட்டவலம் : திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த நீலந்தாங்கல் பெரிய ஏரிக்கரையில் கடந்த, 10ம் தேதி காலையில், புதுச்சேரி இந்திரா நகரை சேர்ந்த பிரபல ரவுடி அய்யப்பன், 42, வெட்டி கொலை செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில், அந்த நபர், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தது தெரிந்தது.
இவர், சந்துரு, 35, என்பவருக்கு மீட்டர் வட்டிக்கு, 3 லட்சம் ரூபாய் கொடுத்தார் என கூறப்படுகிறது. சந்துரு வட்டியை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் என கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் சந்துரு வீட்டிற்கு சென்ற அய்யப்பன், பணம் கேட்டு அவரை அவமானப்படுத்தினார்.
ஆத்திரத்தில் இருந்த சந்துரு, 10 பேர் கும்பலுடன் சென்று அய்யப்பனை கடத்தி கொலை செய்தார். அந்த கும்பலை வேட்டவலம் போலீசார் நேற்று கைது செய்தனர்.