/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/தி.மலையில் பிரான்ஸ் நாட்டு பெண்ணைபாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைதுதி.மலையில் பிரான்ஸ் நாட்டு பெண்ணைபாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
தி.மலையில் பிரான்ஸ் நாட்டு பெண்ணைபாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
தி.மலையில் பிரான்ஸ் நாட்டு பெண்ணைபாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
தி.மலையில் பிரான்ஸ் நாட்டு பெண்ணைபாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
ADDED : மார் 20, 2025 01:53 AM
தி.மலையில் பிரான்ஸ் நாட்டு பெண்ணைபாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
திருவண்ணாமலை:திருவண்ணாமலையில், கஞ்சா போதையில், பிரான்ஸ் நாட்டு பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த, 46 வயது பெண் ஒருவர், கடந்த ஜன.,ல் ஆன்மிக பயணமாக திருவண்ணாமலை வந்தார். அங்கு, விசிறி சாமியார் ஆஸ்ரம பின்
பகுதியிலுள்ள தனியார் விடுதியில் தங்கி பல இடங்களுக்கு சென்றும், ஆஸ்ரமங்களில் தியானம் செய்தும் வந்தார். கடந்த, 17ம் தேதி அண்ணாமலையார் மலை மீதுள்ள கந்தாஸ்ரமத்திற்கு தியானம் செய்ய சென்றார். வழியில், மேற்கு கோபுர தெருவை சேர்ந்த வெங்கடேசன், 30, என்பவர், அவரிடம், மேலே உள்ள ஒரு குகையில் அமர்ந்து தியானம் செய்தால் முக்தி கிடைக்கும், சிவலிங்க தரிசனம் கிடைக்கும் என கூறி அழைத்துச் சென்றார்.
அப்பகுதி, ஆட்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், கஞ்சா போதையில் இருந்த வெங்கடேசன், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அங்கு ஆள்நடமாட்டம் இல்லாததால், சோபிக்லேதர் சத்தமிட்டும் பலனில்லை. இதை சாதகமாக பயன்படுத்திய வெங்கடேசன், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பினார். அப்பெண் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து நடந்தவற்றை, பிரான்ஸ் நாட்டு துாதரகத்திற்கு தகவல் தெரிவித்தார். துாதரகம் மூலம் வந்த புகாரையடுத்து, திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, கூலித்தொழிலாளி வெங்கடேசனை கைது செய்தனர். அப்பெண், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.