/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போலீசாக நடித்து வழிப்பறி 'கில்லாடி' வாலிபர் கைது போலீசாக நடித்து வழிப்பறி 'கில்லாடி' வாலிபர் கைது
போலீசாக நடித்து வழிப்பறி 'கில்லாடி' வாலிபர் கைது
போலீசாக நடித்து வழிப்பறி 'கில்லாடி' வாலிபர் கைது
போலீசாக நடித்து வழிப்பறி 'கில்லாடி' வாலிபர் கைது
ADDED : ஜூன் 01, 2025 01:32 AM

காங்கயம் : காங்கயம் அருகே, போலீஸ் என்று கூறி, தொழிலாளியிடம் வழிப்பறி செய்த, ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
காங்கயம் அடுத்த சாவடிபாளையத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 30; 'லேத் ஒர்க் ஷாப்' ஊழியர். கடந்த வாரம், படியூர் அருகே ஒட்டப்பாளையம் டாஸ்மாக் மதுக்கடைக்கு, 'டூவீரில் சென்றுள்ளார்.அங்கு 'டூவீலரில்' வந்த ஒருஇளைஞர், நவீன்குமாரை வழிமறித்துள்ளார்.
காங்கயம் கிரைம் பிரிவு போலீஸ் என்று கூறி, நவீன்குமார் வந்த ஆவணங்களை கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே, அவரை தாக்கி, மொபைல் போன் மற்றும், 5,400 ரூபாய், 'டூ வீலர்' சாவி ஆகியவற்றை பறித்து சென்றுள்ளார்.
அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த நவீன்குமார், இதுகுறித்து காங்கயம் போலீசில் புகார் செய்தார். விசாரணை மேற்கொண்டதில், ஓலப்பாளையத்தை சேர்ந்த, போலீசுக்கு உதவியாக (பிரண்ட் ஆப் போலீஸ்) இருந்த, அன்பழகன், 25 என்பவர், வழிப்பறி செய்தது தெரியவந்தது.
இதேபோல், காங்கயம் சுற்றுப்பகுதிகளில், கடந்த ஆறு மாதங்களாக, இரவு நேரத்தில் 'டூ வீலரில்' வருவோரை மடக்கி, போலீஸ் என்று கூறி, பணம் பறித்து வந்ததும், மளிகை கடைகளில் சோதனை நடத்தியதும் தெரியவந்தது.
அன்பழகனை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ரிமாண்ட் செய்தனர். போலீஸ் என்று கூறி, மிரட்டி, பணம் பறித்து வந்தவர் கைதானது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.