Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'தரமான ஓ.ஆர்.எஸ்., பானங்களை பருக வேண்டும்'

'தரமான ஓ.ஆர்.எஸ்., பானங்களை பருக வேண்டும்'

'தரமான ஓ.ஆர்.எஸ்., பானங்களை பருக வேண்டும்'

'தரமான ஓ.ஆர்.எஸ்., பானங்களை பருக வேண்டும்'

ADDED : மே 24, 2025 11:27 PM


Google News
திருப்பூர்: 'தரமான ஓ.ஆர்.எஸ்., பானங்கள் குறித்து தெரிந்து கொண்டு, அவற்றை மட்டும் பொதுமக்கள் அருந்த வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையில் இலவசமாக ஓ.ஆர்.எஸ்., பெற்றுக் கொள்ளலாம்; உதவிக்கு 104 ெஹல்ப்லைனில் அழைத்து விபரம் பெறலாம்,' என, பொது சுகாதாரத்துறை அறிவுரை வழங்குகிறது.

வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், உடலில் இருந்து நீர்ச்சத்து, அத்தியாவசிய உப்புகள் கணிசமாக வெளியேறி விடும். அதற்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டால், கடுமையான நீரிழப்பு ஏற்படும். எனவே, உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள உப்பு, சர்க்கரை, ஓ.ஆர்.எஸ்., கரைசலை பயன்படுத்துவதால், வயிற்றுபோக்கால் ஏற்படும் நீரிழப்பை தவிர்க்க முடியும்.

திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஒரு ஓ.ஆர்.எஸ்., பொட்டலத்தின், 20.5 கிராம் மொத்த எடை கொண்டது. ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, ஆறிய பிறகு, ஓ.ஆர்.எஸ்., பொடியை அந்த நீரில் கரைத்து குடிக்க வேண்டும்; 24 மணி நேரத்துக்குள் இதனை பயன்படுத்திட வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த உப்பு, சர்க்கரை, கரைசல் பொட்டலங்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் அறியலாம்.

திரவ உப்பு, சர்க்கரை கரைசல் என்ற பல்வேறு பெயர்களில் ஓ.ஆர்.எஸ்., விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக நீர்ச்சத்து பானங்கள் என்று விளம்பரப்படுத்தபடும் பானங்கள் ஆற்றல் மேம்படுத்தக்கூடிய திரவங்களாக மட்டும் பயன்படுகிறது.

இவற்றில், உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய அளவு தாது உப்பு, குளுக்கோஸ் ஆகியவை இல்லை. எனவே, பொதுமக்கள், தரமான ஓ.ஆர்.எஸ்., பொட்டலங்களை மட்டுமே தெரிந்து கொண்டு அதன் பின் பயன்படுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் அறியலாம்.

இவ்வாறு சுகாதாரத்துறையினர் அறிவுரை வழங்குகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us