Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாக்காளர் சிறப்பு முகாமில் பழைய போட்டோவை மாற்றலாம்!

வாக்காளர் சிறப்பு முகாமில் பழைய போட்டோவை மாற்றலாம்!

வாக்காளர் சிறப்பு முகாமில் பழைய போட்டோவை மாற்றலாம்!

வாக்காளர் சிறப்பு முகாமில் பழைய போட்டோவை மாற்றலாம்!

ADDED : செப் 14, 2025 12:10 AM


Google News
திருப்பூர்:இந்திய தேர்தல் கமிஷன், ஒவ்வொரு ஆண்டும், வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சிறப்பு முகாம் கள் நடத்தி, வாக்காளரிடம் இருந்து விண்ணப்ப படிவம் பெற்று, மேல்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.

விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், இந்தாண்டு நடக்கும், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் முக்கியத்துவம் பெறுகிறது. வாக்காளர்களுக்கு, 2000-வது ஆண்டில் இருந்து, அடையாள அட்டை வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக வழங்கிய போது, 'டி.என்.' என்று மாநிலத்தின் குறியீட்டுடன், 12 இலக்க எண்ணுடன் அடையாள எண் துவங்கியது.

அதன்பின், மூன்று ஆங்கில எழுத்துடன், 10 இலக்க அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலிலும், அடையள அட்டை எண் இடம்பெற்றுள்ளது. புதிய வாக்காளர் அட்டை பெறாமல், பழைய அட்டையை வைத்துள்ளவர்கள், தங்களது விவரங்களை சரிபார்த்து, புதிய அடையாள அட்டை கேட்டு விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் அட்டையில், பழைய போட்டோ இடம்பெற்றிருக்கிறது. அவற்றை மாற்ற விரும்பும் வாக்காளர், வரும் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது, போட்டோவை மாற்றிக்கொள்ளலாம்.

தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில்,'பழைய வாக்காளர் அட்டை எண், தானியங்கி முறையில், 10 இலக்க எண்ணாக மாற்றப்பட்டுள்ளது. அவ்விவரம், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. வாக்காளர்கள், பார்வைக்கு வைக்கப்படும் வாக்காளர் பட்டியலை பார்த்து தெரிந்துகொள்ளலாம். புதிய எண்ணுடன் அடையாள அட்டை பெற, படிவம் -8 வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதேபோல், பழைய போட்டோவை மாற்றி, புதிய அடையாள அட்டை பெறவும், படிவம் -8 வாயிலாக விண்ணப்பிக்கலாம். வாக்காளர், மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம். விரைவில் துவங்கும், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத் த சிறப்பு முகாம்களில், தேவையான படிவங்களில் விண்ணப்பிக்கலாம்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us