/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மூங்கில் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு தொழிலாளர்கள் கோரிக்கை மூங்கில் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு தொழிலாளர்கள் கோரிக்கை
மூங்கில் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு தொழிலாளர்கள் கோரிக்கை
மூங்கில் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு தொழிலாளர்கள் கோரிக்கை
மூங்கில் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு தொழிலாளர்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 06, 2025 11:10 PM
உடுமலை, ; மூங்கிலால் தயாரிக்கப்படும் கூடை மற்றும் கைவினை பொருட்கள் விற்பனைக்கு தனியிடமும், சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் அரசை தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், பிரதானமாக உள்ள விவசாய சாகுபடி பணிகளில், மூங்கில் கூடைகளுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. விதைப்பு செய்வது முதல் அறுவடை வரை, மூங்கில் கூடைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இத்தேவைக்காக, உடுமலை நகரில், 15க்கும் அதிகமான குடும்பத்தினர், மூங்கிலை மூலப்பொருளாக கொண்டு பல்வேறு தயாரிப்புகளை செய்து வந்தனர்.
தக்காளியை சந்தைப்படுத்த, எடுத்து வருதல் உட்பட தேவைகளுக்கு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்தது. இதனால், மூங்கில் கூடைகளுக்கு மவுசு குறைந்து, தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
அப்போது, ஆடுகளை மூடி வைக்கவும், சாதம் வடிகட்ட பயன்படுத்தப்படும் தட்டு ஆகியவையே தொழிலாளர்களின் குறைந்த வருவாய்க்கு கைகொடுத்தது.
பின்னர், வீட்டு ஜன்னல்களுக்கான அலங்கார, 'ஸ்கிரீன்', முறம், கூண்டு, மற்றும் ஏணி மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை அவர்களுக்கு வருவாய் அளித்தது.
தொழிலாளர்கள் கூறியதாவது: கேரளாவிலிருந்து, மூங்கில், வாங்குகிறோம். இதில், விளைபொருட்களை எடுத்து வர பயன்படும், கூடைகளை தயாரிக்கிறோம். தற்போது, 350 ரூபாய் முதல் ஆர்டர்கள் அடிப்படையில், கூடை விற்பனையாகிறது.
வீடுகளை அலங்கரிக்கும் பல்வேறு பொருட்களையும் தயாரிக்கிறோம். அவற்றை விற்பனை செய்வதற்கான கடைகளை பஸ் ஸ்டாண்ட் உட்பட பகுதிகளில் அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். கண்காட்சிகளிலும், 'ஆன்லைன்' வாயிலான விற்பனை செய்ய சந்தை வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்தி தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு, தொழிலாளர்கள் தெரிவித்தனர்.