திருப்பூர்; தேனி மாவட்டம் புலிமான்கோம்பையைச் சேர்ந்தவர் சரத்குமார், 24.
வெள்ளகோவிலில் ஒரு நுால் மில்லில் தங்கி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மில்லில் புகை போக்கி முறையாக இயங்கவில்லை என்று பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ேசர்க்கப்பட்டார். அங்கு சிசிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.