/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நகை திருடிய பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை நகை திருடிய பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
நகை திருடிய பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
நகை திருடிய பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
நகை திருடிய பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
ADDED : ஜூன் 04, 2025 01:46 AM
திருப்பூர்,; திருப்பூரில் நகை, பணம் திருடிய வழக்கில் பெண்ணுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருப்பூர், குமரானந்தபுரம் பாபுஜிநகரை சேர்ந்தவர் சரண்யா. இவர் நாமக்கல்லை சேர்ந்த கவுசல்யா, 35 என்பவரை வேலைக்கு வைத்திருந்தார். கடந்த, 2017ம் ஆண்டு டிச., 30ம் தேதி இரவு கவுசல்யா, தனது வேலை செய்த வீட்டில் இருந்து, 3 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாயை திருடினார்.
இதுகுறித்து சரண்யா அளித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசல்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை, திருப்பூர் ஜே.எம்.எண்: 1 கோர்ட்டில் நடந்தது. நேற்று முன்தினம் இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. கவுசல்யாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு செந்தில்ராஜா தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் கவிதா ஆஜராகி வாதாடினார். சிறப்பாக செயல்பட்டு தண்டனை பெற்றுக்கொடுத்த வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ் பெக்டர் மற்றும் போலீசாரை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பாராட்டினார்.