/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஒயர் திருடும் கும்பல்; விவசாயிகள் புகார்ஒயர் திருடும் கும்பல்; விவசாயிகள் புகார்
ஒயர் திருடும் கும்பல்; விவசாயிகள் புகார்
ஒயர் திருடும் கும்பல்; விவசாயிகள் புகார்
ஒயர் திருடும் கும்பல்; விவசாயிகள் புகார்
ADDED : ஜன 31, 2024 12:59 AM

பல்லடம்;ஒயர் திருட்டு கும்பலின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, பல்லடம் போலீசில், விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:
ராயர்பாளையம், பனப்பாளையம் பகுதிகளில் உள்ள விவசாயக் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றில் உள்ள ஒயர்களை திருட்டு கும்பல் ஒன்று துண்டித்து எடுத்து சென்றுள்ளது. பல மீட்டர் ஒயர்களை திருடிச் செல்வதால், மீண்டும் மீண்டும் ஒயர்கள் மாற்ற வேண்டி உள்ளது.
இதனால், தேவையற்ற செலவு ஏற்படுவதுடன், அன்றாட பணிகள் தடைபடுகின்றன. வருவாய் இழப்புடன், தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுகிறது. தொடர்ந்து ஒயர் திருட்டில் ஈடுபட்டு அட்டகாசம் செய்து வரும் திருட்டு கும்பலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
போலீசார் மெத்தனம்
மாதப்பூர், கணபதிபாளையம், கரைப்புதுார், ஆறுமுத்தாம்பாளையம், கோடங்கிபாளையம் என பல கிராமங்களிலும் ஒயர் திருட்டு நடந்துள்ளன. இருப்பினும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
ஒயர்களை திருடி, உருக்கி அதிலுள்ள செம்பு கம்பிகளை விற்று காசு பார்க்கின்றனர். இதனையே பலர் தொழிலாக கொண்டுள்ளனர். எனவே, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.