/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவதா? மக்கள் பரிசீலனை செய்வர்: வானதி தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவதா? மக்கள் பரிசீலனை செய்வர்: வானதி
தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவதா? மக்கள் பரிசீலனை செய்வர்: வானதி
தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவதா? மக்கள் பரிசீலனை செய்வர்: வானதி
தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவதா? மக்கள் பரிசீலனை செய்வர்: வானதி
ADDED : ஜூன் 01, 2025 01:40 AM

பல்லடம்: ''தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவதா? வேண்டாமா என்பதை மக்கள் பரிசீலிப்பார்கள்'' என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.
பல்லடத்தில், மகாராணி அகல்யா பாய் ஹோல்கரின், 300ம் ஆண்டு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது. பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் சீனிவாசன், மேற்கு மண்டல பொறுப்பாளர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்து பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி பேசியதாவது:
தமிழகத்தில், திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு வரும் தி.மு.க., அரசில், பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. இதேபோல், பெண்ணுரிமைதான் எங்களது அடிப்படை கொள்கை என்று கூறி வரும் இந்த ஆட்சியில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதையெல்லாம் தொடர்ந்து நாங்கள் பேசி வருகிறோம். த.வே.க., தலைவர் விஜய், அவருக்கு தெரிந்த பாணியில் இது குறித்து பேசியுள்ளார்.
பஸ், ஆட்டோ கட்டணம் குறித்து பரிசீலிக்கப்படும் என்றுதான் போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார். கட்டணம் குறைக்கப்படும் என்று கூறவில்லை. தமிழக அரசால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்காது.
மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்று கூறியது உட்பட, அரசு ஊழியர்கள், மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆனது? நான்கு ஆண்டு முடிந்து விட்டது. இனிமேல் பரிசீலனை செய்ய என்ன உள்ளது?
இவர்களுக்கு ஓட்டு போடுவதா, வேண்டாமா என்பதை, இனி மக்கள் பரிசீலனை செய்வார்கள். பா.ஜ., கட்சி தேர்தல் பணிகளை துவங்கும் கட்சியல்ல. எப்போதும் தயாராகவே இருக்கும் கட்சியாகும். கொரோனா தொற்று பரவி வரும் சூழலில், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு, சுகாதார துறை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.