கொடை வள்ளல்கள் படங்கள் இடம்பெறுமா?
கொடை வள்ளல்கள் படங்கள் இடம்பெறுமா?
கொடை வள்ளல்கள் படங்கள் இடம்பெறுமா?
ADDED : பிப் 10, 2024 11:27 PM
திருப்பூர்:திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளர் சிவதாசன், திருப்பூர் மேயர் தினேஷ்குமாரிடம் அளித்த மனு: 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ரங்கசாமி செட்டியார் மாநாட்டு அரங்கத்தில், திருப்பூருக்கு பல்வேறு வகையிலும் உதவி செய்த பிரமுகர்களின் படங்களை வைத்து அவர்களை பெருமைப்படுத்த வேண்டும்.
அவ்வகையில், சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன், நகராட்சி முதல் தலைவர் விட்டல்தாஸ் சேட், டவுன்ஹாலுக்கு இடம் வழங்கிய ரங்கசாமி செட்டியார், குடிநீர் வழங்கிய பழனிசாமி கவுண்டர், சிக்கண்ணா கல்லுாரி அளித்த சிக்கண்ண செட்டியார், நஞ்சப்பா பள்ளிக்கு இடம் வழங்கிய நஞ்சப்ப செட்டியார்.
கே.எஸ்.சி., மற்றும் பழனியம்மாள் பள்ளிக்கு இடம் வழங்கிய அவிநாசிலிங்கம் செட்டியார், எல்.ஆர்.ஜி., கல்லுாரிக்கு இடம் வழங்கிய கோவிந்தராஜூலு நாயுடு, ஜெய்வாபாய் பள்ளிக்கு இடம் வழங்கிய தேவ்ஜி ஆஷர், வித்யாலயம் பள்ளிக்கு இடம் வழங்கிய சுந்தராம்பாள்.
பிஷப் பள்ளிக்கு இடம் வழங்கிய பிஷப் உபகாரசாமி, சுப்பைய செட்டியார், சுந்தர்ராஜ், கந்தசாமி செட்டியார், ஈஸ்வரமூர்த்தி கவுண்டர் போன்ற முக்கிய பிரமுகர்கள் படங்கள் இந்த அரங்கில் வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.