/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/விநாயகபுரம் வடிகால் பிரச்னைக்கு விடியல் வருமா?விநாயகபுரம் வடிகால் பிரச்னைக்கு விடியல் வருமா?
விநாயகபுரம் வடிகால் பிரச்னைக்கு விடியல் வருமா?
விநாயகபுரம் வடிகால் பிரச்னைக்கு விடியல் வருமா?
விநாயகபுரம் வடிகால் பிரச்னைக்கு விடியல் வருமா?
ADDED : ஜன 02, 2024 11:53 PM

திருப்பூர்:இடுவம்பாளையம், விநாயகபுரம் பகுதியில் கழிவு நீர் குளம் போல் வீதிகளில் தேங்கி நின்று அவதி நீடிக்கிறது.
திருப்பூர் மாநகராட்சி, 40வது வார்டுக்கு உட்பட்டது இடுவம்பாளையம் விநாயகபுரம் பகுதி. இப்பகுதியில், 40 ஆண்டாக, பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி இதற்கு முன், ஊராட்சியாக இருந்த போது, ஐந்து வீதிகளில் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டது.
ஆனால், இதற்கு உரிய 'டிஸ்போஸ் பாயின்ட்' இல்லை. இதனால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், கடந்த செல்லாமல் தேங்கி நிற்கிறது. பல நேரங்களில் ரோடு முழுவதும் கழிவுநீர் பாய்ந்து தேங்கி விடுகிறது.
குறிப்பாக, வீதிகளில் நடந்து செல்லக்கூட முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மழை நாட்களில், நிலைமை இன்னும் மோசம். தேங்கி நிற்கும் கழிவு நீருடன் கலந்து மழை நீரும் வீடுகளுக்குள் புகுந்து அவதி நிலவுகிறது. இது போதாதென்று துர்நாற்றம், கொசுத் தொல்லை, நோய்த் தொற்று அபாயத்துடனேயே வாழ்ந்து வருகிறோம் என்கின்றனர் விநாயகபுரம் மக்கள்.
விரைவில் தீர்வு!
மக்களின் புலம்பல் குறித்த, வார்டு கவுன்சிலர் சுபத்ராதேவி கூறியதாவது:
விநாயகபுரத்திலுள்ள, 5 வீதிகளில் கழிவு நீர் கால்வாய் முறையாக கட்டினால், ஒட்டு மொத்த இடுவம்பாளையம் பகுதி கழிவு நீர் பிரச்னையும் முடிவுக்கு வரும். ஆய்வு செய்த அதிகாரிகள், 9 கோடி ரூபாய் செலவாகும் என கூறினர்.
'டிஸ்போஸ் பாயின்ட்' அமைக்க தனியார் இடம் தடையாக உள்ளது. நில உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தப்படுகிறது. தற்போது, 3 நாளுக்கு ஒரு முறை கழிவுநீர் அகற்றப்படுகிறது. தற்காலிக தீர்வாக குழாய் பதித்து கழிவு நீரைக் கொண்டு செல்ல யோசனை உள்ளது. விரைவில் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.