/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/'பூசாரி' தோட்டத்துக்கு 'அருள்' கிடைக்குமா? மாநகராட்சி நிர்வாகத்தை எதிர்நோக்கி மக்கள் 'தவம்''பூசாரி' தோட்டத்துக்கு 'அருள்' கிடைக்குமா? மாநகராட்சி நிர்வாகத்தை எதிர்நோக்கி மக்கள் 'தவம்'
'பூசாரி' தோட்டத்துக்கு 'அருள்' கிடைக்குமா? மாநகராட்சி நிர்வாகத்தை எதிர்நோக்கி மக்கள் 'தவம்'
'பூசாரி' தோட்டத்துக்கு 'அருள்' கிடைக்குமா? மாநகராட்சி நிர்வாகத்தை எதிர்நோக்கி மக்கள் 'தவம்'
'பூசாரி' தோட்டத்துக்கு 'அருள்' கிடைக்குமா? மாநகராட்சி நிர்வாகத்தை எதிர்நோக்கி மக்கள் 'தவம்'
ADDED : ஜன 11, 2024 07:16 AM

திருப்பூர் : திருப்பூர் பூசாரி தோட்டத்தில் சாலை அமைக்க தோண்டப்பட்டு, ஆறு மாதமாகியும், பணிகள் இன்னும் துவங்காத காரணத்தால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி, 38வது வார்டுக்கு உட்பட்ட செல்லம் நகர், கதர் கடை பஸ் ஸ்டாப் அருகே உள்ள பூசாரி தோட்டத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த, ஆறு மாதம் முன், சாலை பணிக்காக வீதி தோண்டப்பட்டு மண் எடுக்கப்பட்டது. மாநகராட்சி தரப்பில் பணிக்கான பூமி பூஜை துவங்கப்பட்டது.
மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் பலரும் பங்கேற்று சென்றனர். ஆனால், இதுவரையிலும் அப்பகுதியில் எவ்வித வேலையும் நடக்கவில்லை. ரோட்டில் கழிவு நீர் செல்கிறது. மழை காலங்களில் குடியிருப்பை விட்டு வெளியேற முடியாத வகையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்று வருகிறது.
நேற்று முன்தினம் பெய்த மழைக்கு ஒவ்வொரு வீட்டின் முன் குளம் போல் தண்ணீர் தேங்கியபடி உள்ளது. பாதசாரிகள், வாகன ஓட்டிகள் செல்ல முடியாத வகையில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. குறிப்பாக, சாக்கடை கால்வாய் அமைக்கும் போது, முறையாக திட்டமிடப்படாமல் கட்டப்பட்டதால், கழிவு நீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்று கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதுதொடர்பாக, வார்டு கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தீவு போல தனித்து விடப்பட்ட பகுதியாக பூசாரி தோட்டம் உள்ளது என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
மழை நீரில்விழுந்த மூதாட்டி
அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி கருப்பத்தாள், கோவிந்தம்மாள் ஆகியோர் வீட்டு முன் தேங்கி நின்றுள்ள மழை நீரில் எதிர்பாராமல் கீழே விழுந்தனர். அதில், மூதாட்டி கருப்பத்தாளுக்கு கையில் அடிபட்டு, கட்டு போட்டுள்ளார்.
சில நாட்களாக, பாதசாரிகள், வாகன ஓட்டிகள் என, ஐந்துக்கும் மேற்பட்டோர் தேங்கியுள்ள நீரில் விழுந்து காயமடைந்தனர்.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மாநகராட்சியினர் துரிதமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பு.