/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போலியோ சொட்டு மருந்து முகாம் நடப்பாண்டில் நடக்குமா? போலியோ சொட்டு மருந்து முகாம் நடப்பாண்டில் நடக்குமா?
போலியோ சொட்டு மருந்து முகாம் நடப்பாண்டில் நடக்குமா?
போலியோ சொட்டு மருந்து முகாம் நடப்பாண்டில் நடக்குமா?
போலியோ சொட்டு மருந்து முகாம் நடப்பாண்டில் நடக்குமா?
ADDED : ஜூன் 13, 2025 09:50 PM
உடுமலை; போலியோ சொட்டு மருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
வழக்கமாக ஜனவரியில் இதற்கான பணி துவங்கி பிப்., அல்லது மார்ச் மாத முடிவுக்குள் சொட்டு மருந்து வழங்கி, முடிக்கப்பட்டு விடும்.
விடுபட்ட குழந்தைகளுக்கும் வீடுவீடாக சென்று போலியோ சொட்டு மருந்து தரப்படும்.
நடப்பாண்டு, ஜூன் துவங்கியும், போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான எந்த அறிவிப்பும் வரவில்லை.
சுகாதாரத்துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, ''போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம், 2024 உடன் நிறுத்தப்பட்டாலும், அதனை வெளிப்படையாக அறிவிக்க வாய்ப்பில்லை.
மத்திய, மாநில அரசின் கொள்கை ரீதியான முடிவு என்பதால், அறிவிப்பு நேரடியாக இருக்காது.
இனி போலியோ சொட்டு மருந்து முகாம் நடப்பதற்கு வாய்ப்புகள் குறைவு,' என்றனர்.