/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இறைச்சி கடைகளுக்கு தனி வளாகம் நகராட்சி கவனம் செலுத்துமா? நகராட்சி கவனம் செலுத்துமா?இறைச்சி கடைகளுக்கு தனி வளாகம் நகராட்சி கவனம் செலுத்துமா? நகராட்சி கவனம் செலுத்துமா?
இறைச்சி கடைகளுக்கு தனி வளாகம் நகராட்சி கவனம் செலுத்துமா? நகராட்சி கவனம் செலுத்துமா?
இறைச்சி கடைகளுக்கு தனி வளாகம் நகராட்சி கவனம் செலுத்துமா? நகராட்சி கவனம் செலுத்துமா?
இறைச்சி கடைகளுக்கு தனி வளாகம் நகராட்சி கவனம் செலுத்துமா? நகராட்சி கவனம் செலுத்துமா?
ADDED : பிப் 12, 2024 12:13 AM
உடுமலை:உடுமலை சந்தை ரோட்டில், நகராட்சி வணிக வளாகம் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் சந்தைக்கு வந்து செல்கின்றனர்.
இங்குள்ள, வணிக வளாகத்தில், மளிகை கடை, பொரிக்கடை, காய்கறி கடை, ரேஷன் கடை என, வரிசையாக அமைந்துள்ளன. இக்கடைகளுக்கு, மத்தியில், துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்படுத்தும் வகையில், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழி மற்றும் மீன் கடைகள் அமைந்துள்ளன.
இறைச்சிக்கடைகளில், பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். ஆடுகள் நகராட்சி, ஆடு வதைக்கூடத்தில் அறுத்து, முறையான அனுமதி பெற்று விற்க வேண்டும், என பல்வேறு விதிகள் உள்ளன.
ஆனால், இங்குள்ள ஆடு, மாடு மற்றும் கோழி இறைச்சிக்கடைகளில், திறந்தவெளியில், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், அவைகள் அறுத்து, ரத்தம், கழிவுகள் சாக்கடையிலும், ரோட்டிலும் வீசப்படுகிறது. மீன் கடைகளிலும், கழிவுகள் ரோட்டிலேயே கொட்டப்படுகிறது.
இறைச்சி கடைகளில், ரோட்டில் வரும் மக்களுக்கு தெரியும் வகையில், மக்கள் நடக்கும் நடை பாதை பகுதியில், இறைச்சி தொங்கவிடப்படுகிறது. இதனால், கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, நகராட்சி சந்தை வளாகத்தில், சுகாதார கேடு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள, இறைச்சி, கோழி, மீன் கடைகளை அகற்றி, மக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில், இக்கடைகளுக்கு தனி வணிக வளாகம் அமைக்க வேண்டும், என, விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.