/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இ-சேவை மைய கட்டடம் சமுதாயக்கூடம் ஆகுமா? இ-சேவை மைய கட்டடம் சமுதாயக்கூடம் ஆகுமா?
இ-சேவை மைய கட்டடம் சமுதாயக்கூடம் ஆகுமா?
இ-சேவை மைய கட்டடம் சமுதாயக்கூடம் ஆகுமா?
இ-சேவை மைய கட்டடம் சமுதாயக்கூடம் ஆகுமா?
ADDED : செப் 01, 2025 12:31 AM

பல்லடம்; பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம் புதுார் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள இ--சேவை மைய கட்டடம் பயன்பாடின்றி உள்ளது. இதை சமுதாய நலக்கூடமாக மாற்றி பயன்பாட்டுக்கு விட வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'இங்குள்ள இ--சேவை மைய கட்டடம், 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 2019--20ம் ஆண்டு, ஒன்றிய பொது நிதியின் கீழ், கட்டப்பட்டது. ஐந்து ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் மக்களின் வரிப்பணம் முடங்கி கிடக்கிறது. இதை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி பலமுறை மனு கொடுக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லை. பயன்பாடற்ற இந்த அரசு கட்டடம் தற்போது பந்தல் ஒப்பந்ததாரர் ஒருவரின் பிடியில் உள்ளது.
ஊராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடம் பொள்ளாச்சி ரோடு, வெங்கிட்டாபுரத்தில் உள்ளது. இங்கிருந்து, 7 கி.மீ, தொலைவில் இருப்பதால், அங்கு செல்வது சிரமம். எனவே, பயன்பாடற்ற இ--சேவை மைய கட்டடத்தை சமுதாய நலக்கூடமாக மாற்றுவதன் மூலம், இங்குள்ள மக்கள் பலரும் பயன்பெறுவர்' என்றனர்.