ADDED : ஜூன் 26, 2025 12:12 AM

அவிநாசி ஒன்றிய மா.கம்யூ., செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் பழனிசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் குமாரசாமி உட்பட கட்சியினர் பி.டி.ஓ., (ஊராட்சிகள்) விஜயகுமாரிடம் அளித்த மனு:
புஞ்சை தாமரை குளம் ஊராட்சி, ஆதி திராவிடர் காலனி, ஆதராம்பாளையம், நமச்சிபாளையம் ஆகிய கிராமங்களில், 350 குடும்பத்தினர் வசிக்கின்றனர். உப்புத் தண்ணீர், குடிநீர் என இரண்டும் இரண்டு மாதங்களாக வரவில்லை. சில நேரங்களில் குடிநீர் சுத்திகரிக்கப்படாமல் வருவதால் நோய்கள் ஏற்படுகிறது. குடிநீர் தேடி பெண்கள் அலைந்து வேலைக்குச் செல்ல முடியாமல் வருமானத்தை இழந்து வருகின்றனர். தீர்வு காணப்படாவிட்டால், போராட்டம் நடத்துவோம்.