/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு அதிகாரியாகும் எண்ணம் ஈடேறுமா? 'குரூப் 1' எழுதிய இளைஞர்கள் முனைப்பு அரசு அதிகாரியாகும் எண்ணம் ஈடேறுமா? 'குரூப் 1' எழுதிய இளைஞர்கள் முனைப்பு
அரசு அதிகாரியாகும் எண்ணம் ஈடேறுமா? 'குரூப் 1' எழுதிய இளைஞர்கள் முனைப்பு
அரசு அதிகாரியாகும் எண்ணம் ஈடேறுமா? 'குரூப் 1' எழுதிய இளைஞர்கள் முனைப்பு
அரசு அதிகாரியாகும் எண்ணம் ஈடேறுமா? 'குரூப் 1' எழுதிய இளைஞர்கள் முனைப்பு
ADDED : ஜூன் 15, 2025 11:37 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், பத்து இடங்களில் அமைக்கப்பட்டிருந்த, 16 மையங்களில், குரூப் - 1 தேர்வு நேற்று நடந்தது. விண்ணப்பித்த 4,303 பேரில், 3,202 பேர் தேர்வு எழுதினர்; 1,101 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணியிடங்களுக்கான குரூப் - 1 முதன்மை தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில், எல்.ஆர்.ஜி., கல்லுாரி, குமரன் கல்லுாரி, கே.எஸ்.சி., பள்ளி, செயின்ட் ஜோசப் கல்லுாரி, பழனியம்மாள் பள்ளி, கிட்ஸ் கிளப், பிரன்ட்லைன் பள்ளி, ஏ.ஜி., கல்லுாரி, ஏஞ்சல் கல்லுாரி, இடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பத்து இடங்களில் அமைக்கப்பட்ட, 16 மையங்களில், குரூப் - 1 தேர்வு நடந்தது.
மாவட்டத்தில் மொத்தம் 4,303 பேர், தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில், 3,202 பேர், தேர்வு எழுதினர்; 1,101 பேர் ஆப்சென்ட் ஆகினர். நான்கு பறக்கும்படை குழுவினர், தேர்வு மையங்களுக்கு சென்று, சோதனைகள் நடத்தினர். காலை, 9:30 மணிக்கு துவங்கிய தேர்வு, மதியம், 12:30 மணிக்கு முடிவடைந்தது.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி மையத்தில் இலவசமாக படித்துவந்த, 85 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் சிலரது கருத்துகள்:
துணை கலெக்டராவதே லட்சியம்
கிருத்திகா, கருவம்பாளையம்:
துணை கலெக்டராகவேண்டும் என்பதே எனது லட்சியம். இதுவரை, மூன்று தேர்வுகள் எழுதியிருக்கிறேன். குரூப் - 2 ஏ, தேர்வில் வெற்றிபெற்று, கடந்த பிப்., மாதம் முதல் கூட்டுறவுத்துறையில் இளநிலை தணிக்கையாளராக பணிபுரிந்து வருகிறேன்.
லட்சியத்தை எட்டுவதற்காக, தற்போது குரூப் - 1 தேர்வு எழுதியுள்ளேன். இந்த கேள்வியெல்லாம் வர வாய்ப்பு குறைவு என்று நினைத்த, பொது அறிவு கேள்விகளும் கூட கேட்கப்பட்டிருந்தன. பதிலளிக்கவே முடியாத வகையிலான கேள்விகளும் இடம்பெற்றிருந்தன. கடினமும், எளிமையும் கலந்ததாகவே தேர்வு அமைந்திருந்தது. ஒவ்வொரு தேர்வையும் அனுபவமாக எடுத்து, அடுத்தடுத்து என்னை தயார்படுத்தி வருகிறேன்.
திட்டமிட்டுசெயல்புரிகிறேன்
ஜெய் ஹரிஷ், கருவம்பாளையம்:
மூன்றாவது முறையாக தற்போது, குரூப் - 1 தேர்வு எழுதியுள்ளேன். இரண்டு முறை, சுயமாகவே தேர்வு செய்து படித்து, எழுதினேன். இந்த முறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று, தேர்வை எதிர்கொண்டேன்.
இந்த தேர்வை பொறுத்தவரை, கடினம், சுலபம் என்று சொல்லமுடியாது. கணிதம் கடினமாகத்தான் இருந்தது. 200 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. எல்லா கேள்விகளுக்கும், சிந்தித்து பதிலளிக்க போதிய நேரம் கிடைக்கவில்லை. கூடுதல் நேரம் வழங்கியிருக்கலாமோ என்று தோன்றியது. ஆனாலும், அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கிறேன்.
அடுத்தமாதம் நடைபெற உள்ள 'குரூப் - 4'க்கும் தயாராகிவருகிறேன். ஏதோ ஒரு குரூப் தேர்வு எழுதி உள்ளே சென்றுவிட்டால், அடுத்தடுத்து தேர்வு எழுதி, அடுத்தடுத்த நிலைக்கு சென்றுவிடலாம் என திட்டமிட்டு, செயல்பட்டுவருகிறேன்.
ஆழம் நிறைந்தகேள்விகள்
ராஜ்சங்கர், குளத்துப்பாளையம்:
இரண்டாவது முறையாக, குரூப் - 1 தேர்வு எழுதியிருக்கிறேன். பொது அறிவு கேள்விகள் 175ல், 120 கேள்விகள் மிக எளிதாகவே அமைந்தன. கணித கேள்விகள் பதிலளிக்க சிரமம் கொடுத்தன. மொத்தத்தில், 150 கேள்விகள் எளிதாகவும்; 50 கேள்விகள் கடினமாகவும் கேட்கப்பட்டிருந்தன.
வழக்கமாக, மொத்தம் 140க்குள்ளாகவே வினாத்தாள் பக்கங்கள் இருக்கும்; இந்த தேர்வில், 150 பக்கங்களுக்கு மேல் கொடுக்கப்பட்டிருந்தன. கூடுதல் தகவல்கள் கொடுக்கப்பட்டு, ஆழ மான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
முதன்முறை எதிர்கொண்டவர்களுக்கு
தேர்வு மிக கடினமாக இருந்திருக்கும்
கடந்த 2021 முதல் 'குரூப்' தேர்வுகள் எழுதி வருகிறேன். முதல்முறை எதிர்கொண்டவர்களுக்கு, இந்த தேர்வு மிக கடினமாகவே அமைந்திருக்கும். எந்தெந்த வகைகளில் கேள்விகள் அமையும் என்கிற அனுபவம் உள்ளதால், என்னால் தேர்வை திறம்பட எதிர்கொள்ளமுடிந்தது. ஆனாலும், தேர்வு எளிது என்று சொல்ல முடியாது.
மத்திய, மாநில அரசு திட்டங்கள், யாருக்கு பயன்படும், யாருக்கு பயன்படவில்லை என்பது போன்ற கருத்து ரீதியாக அணுகும்வகையிலான கேள்விகள் கூடுதலாக கேட்கப்பட்டிருந்தன. கணிதம், வழக்கம்போல், கடினம்தான்.25ல், 10 கணித கேள்விகளுக்கு கூடுதல் நேரம் எடுத்து பதிலளிக்கவேண்டியிருந்தது. இந்த தேர்வில் பக்கங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தது.
- குரூப் 1 தேர்வெழுதிய அவிநாசியைச் சேர்ந்த தமிழி.