/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விட்டுக்கொடுக்காது தி.மு.க.,; விடைகொடுக்குமா அ.தி.மு.க.,? விட்டுக்கொடுக்காது தி.மு.க.,; விடைகொடுக்குமா அ.தி.மு.க.,?
விட்டுக்கொடுக்காது தி.மு.க.,; விடைகொடுக்குமா அ.தி.மு.க.,?
விட்டுக்கொடுக்காது தி.மு.க.,; விடைகொடுக்குமா அ.தி.மு.க.,?
விட்டுக்கொடுக்காது தி.மு.க.,; விடைகொடுக்குமா அ.தி.மு.க.,?

வசூல் வில்லங்கம்
''மித்து... மாயவனார் அதிகாரியா இருக்கிற 'காளை' ஊர் சப் டிவிஷன்ல, 'லோகத்தை ஆள்ற நாதன்'கற ஏட்டுதான் சட்டவிரோத ஆசாமிங்ககிட்ட பணம் கறக்கற வேலையைப் பார்க்குறாராம்.
'தைரிய' பார்கள்
''அக்கா... மாவட்டத்துல டாஸ்மாக் மதுக்கடை 200க்கும் மேல இருக்கு. இதில 30 முதல் 50 கடைகள்ல பார்கள், ஒப்பந்தத்தொகை கூட செலுத்தலையாம். இப்ப டெண்டர் தேதி அறிவிச்சாச்சு. ஆனாலும் சட்டவிரோதமா தொடர்ந்து பார்கள் செயல்பட்டுட்டுதான் வருது. புகார்கள் போனா நடவடிக்கை எடுக்கிற மாதிரி 'சீல்' வைக்கிற மாதிரி 'பாவ்லா' காட்றாங்க. உடனே, 'சீல்' உடைச்சு பாரை திறந்துடறாங்க'' என்றாள் சித்ரா.
தேர்தல் ஜூரம்
''சித்ராக்கா... சட்டசபை தேர்தல்ல அவிநாசி தொகுதியை கூட்டணிக்கட்சிக்கு விட்டுக்கொடுக்காம, இந்தத் தடவை தி.மு.க.,வே போட்டியிடும்ன்னு சொல்றாங்க. ஆனா, அவிநாசி தொகுதி மேல பா.ஜ., கண் வைக்குது. அ.தி.மு.க.,வுக்கோ இந்த தொகுதியை விட்டுத்தர மனசு இல்ல. திருப்பூர் மேயர், இந்த முறை வடக்கு அல்லது தெற்கு தொகுதில நிக்கணும்ங்கற முடிவில இருக்காராம். இதுக்காக மேலிடத்துல பேசிட்டிருக்கிறதாவும் பேச்சு அடிபடுது''
ஜல்ஜீவன் என்னாச்சு?
''மித்து... கலெக்டர் ஆபீஸ்ல மத்திய அரசு விவசா யிகளுக்கு வழங்கும் திட்டங்கள் தொடர்பா, பிரதமர்மற்றும் மத்திய வேளாண் துறை அமைச்சரோட படங்களுடன் இருந்த பேனரை, விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்துட்டிருக்கப்பவே அகற்றியிருக்காங்க... பா.ஜ., காரங்க முற்றுகைப்போராட்டம் நடத்தியும் 'நோ ஏக்ஷன்'. ஜல் ஜீவன்ங்கிற மத்திய அரசின் திட்டத்தையே மாவட்ட நிர்வாகம் மறந்திருச்சு... மறைச்சுடுச்சு... பா.ஜ., காரங்க இதையும் மாவட்ட நிர்வாகத்துக்கு நினைவு படுத்தணும்'' என்றாள் சித்ரா.
'பசை' வித்தை
''சித்ராக்கா... மாநகராட்சில எங்கு பார்த்தாலும் குழாய் உடைஞ்சு குடிநீர் ரோட்ல ஆறா பாயுது. இதுக்கு குடிநீர் குழாய்ப்பணியை ஒப்பந்தம் செய்திருக்கிற நிறுவனத்தின் மெத்தன போக்குதான் முக்கியக் காரணம்ங்கறாங்க. ஒரு வார்டுல, ரெண்டு அடி விட்டமுள்ள இரும்புக்குழாய்கள் இணையுற இடத்தில வெல்டிங் வைக்கறதுக்காக சில நாட்கள் குழி தோண்டி கிடப்பில் போட்டிருக்காங்க. வார்டு கவுன்சிலர், கமிஷனரைச் சந்திச்சு இதுதொடர்பா பேசுனவுடனே ஒப்பந்த நிறுவனத்தினருங்க போன்ல கவுன்சிலரை அழைச்சிருக்காங்க. 'குழாயை இணைச்சாச்சு; குழியை மூடப்போறோம்'ன்னு சொல்லியிருக்காங்க. அங்க போனதுக்கப்புறம்தான் தெரியுது. ரெண்டு அடி விட்ட இரும்புக்குழாயை, ரெண்டு பாக்கெட் 'எம்.சீல்' பசையை வைத்து இணைச்சிருக்காங்க. இப்படிப் பசையைக் கொண்டு ஒட்டுனா, குழாய் உடைப்பும், குடிநீர் ஊற்றும் ஏற்படாம என்ன செய்யும்?''அங்கலாய்த்தாள் சித்ரா.
வசூல் கறார்
''சித்ராக்கா... மாவட்ட வருவாய்த்துறைல அஞ்சு தாலுகாக்களுக்கு தலைவரா இருக்கிற ஒரு அதிகாரி, வசூல்ல கறாராம். புரோக்கர்களைப் பயன்படுத்தாம, தானே நேரடியா கேட்டுடறாராம். வெளிப்படையா இப்படி கேட்டா லஞ்ச ஒழிப்பு போலீஸ்ல ஒருநாள் மாட்டிக்குவீங்கன்னு சொன்னா, லட்சக்கணக்குல காசு கொடுத்துதான் இங்க வந்திருக்கேன்னு ஜம்பமா பேசுறாராம். மாட்டுறப்பதான் புத்தி வரும்ன்னு சக அதிகாரிகளே அவரைத் திட்டித் தள்றாங்க...'' ரகசியம் உடைத்தாள் மித்ரா.
'டுபாக்கூர்' சாகசம்
''மித்து... கலெக்டர் ஆபீஸ்ல குறைதீர்ப்பு நாளன்னிக்கு தீக்குளிப்பு நாடகங்கள் தொடர்ந்து அரங்கேறுது. இதுக்குப் பின்னணில 'டுபாக்கூர் நிருபர்கள்' இருக்காங்களாம். கெடுபிடி இல்லாத கோர்ட் ரோடு வழியா உள்ளே வந்து, கூட்ட அரங்கின் மேற்புற போர்டிகோவுக்கு வந்திடுங்கன்னு ஐடியா கொடுக்குறாங்களாம். இப்படி வந்துதான் தீக்குளிப்பு நாடகங்கள் அரங்கேற்றப்படுதாம். இந்த வாரம், ஒரு டூவீலர்ல பிரஸ்ன்னு போட்டு இருந்துச்சு. அதில அரை லிட்டர் பெட்ரோல் வாட்டர் கேன்ல வைக்கப்பட்டிருந்ததை போலீஸ் கண்டுபிடிச்சு எடுத்திருக்காங்கன்னா பார்த்துக்கோயேன்''... அங்கலாய்த்தாள் சித்ரா.
கலெக்ஷன் ஜரூர்
''சித்ராக்கா... பல்லடம் 'பதிவு' அலுவலகத்துல, பெண் அதிகாரி, கணவர் மூலம்தான் தினமும் பணத்தை கலெக்ட் பண்ணுவாராம். இப்ப வாராவாரம் கலெக்ட் பண்ற மாதிரி ஒருத்தர நியமிச்சிட்டாராம்''