/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆன்மிக மாநாட்டில் அரசியல் எதற்கு? ஹிந்து முன்னணி கேள்வி ஆன்மிக மாநாட்டில் அரசியல் எதற்கு? ஹிந்து முன்னணி கேள்வி
ஆன்மிக மாநாட்டில் அரசியல் எதற்கு? ஹிந்து முன்னணி கேள்வி
ஆன்மிக மாநாட்டில் அரசியல் எதற்கு? ஹிந்து முன்னணி கேள்வி
ஆன்மிக மாநாட்டில் அரசியல் எதற்கு? ஹிந்து முன்னணி கேள்வி
ADDED : ஜூன் 09, 2025 04:11 AM
திருப்பூர்: ஹிந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு காரணமாக ஹிந்துக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியைக் கண்டு 'இண்டி' கூட்-டணியில் உள்ள அரசியல் கட்சிகள் பதட்டம் அடைந்துள்ளன என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரம-ணியம் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது;வரும், 22-ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடை ஹிந்து முன்-னணி நடத்துகிறது. இதில், லட்சக்கணக்கானோர் ஒன்றிணைந்து கந்த சஷ்டி கவசம் படிக்கவுள்ளனர்.
முருக பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் படித்து மாநாடு நடத்துவது காங்., கம்யூ., வி.சி.க., கட்சிகளுக்கு அரசியல் மாநாடாக தெரிகி-றது. ஹிந்து முன்னணி நடத்தும் மாநாட்டுக்கு அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை. ஹிந்துக்கள் மத்தியில் விழிப்பு-ணர்வு வரும் என்ற பயம்ம் பதட்டம் அவர்களிடம் ஏற்பட்டுள்-ளது. இவர்கள் பேச்சு தற்போது, ஹிந்துக்கள் மத்தியில் ஏற்பட்-டுள்ள விழிப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. இவ்-வாறு அதில் கூறியள்ளார்.