/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ஏன்? தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ஏன்?
தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ஏன்?
தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ஏன்?
தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ஏன்?
ADDED : ஜூன் 20, 2025 02:20 AM

பல்லடம் : ''நாய்களுக்கு கு.க., செய்வது மட்டுமே தீர்வாகி விடுமா?'' என, பல்லடத்தில், நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சமீப காலமாக, தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்து பொதுமக்கள் காயம் அடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதன் காரணமாக, ரேபீஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களும் ஏராளம். ஆண்டுதோறும், லட்சக்கணக்கானவர்கள் நாய் கடியால் பாதிக்கப்படுகின்றனர். பல்லடம் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில், தெரு நாய்கள் பல்கி பெருகிவிட்டன.
பாதிக்கப்படும் பொதுமக்கள் அளிக்கும் புகாரின் பேரில், உள்ளாட்சி அமைப்புகளும், நாய்களுக்கு கு.க., செய்கின்றன. இது மட்டுமே தெரு நாய்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விரட்டும் நாய்கள்
பொதுமக்கள் கூறியதாவது:தெரு நாய்கள் விரட்டுவதால், எண்ணற்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் விபத்துக்குள்ளாகியும், நாய்க்கடிபட்டும் படுகாயம் அடைந்துள்ளனர். தெரு நாய்களால் தொல்லை ஏற்படுவதாக புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. பிரச்னை அதிகரிக்கும்போது மட்டும் பெயரளவுக்கு, நாய்களை பிடித்து கு.க., செய்கின்றனர். இவ்வாறு கு.க., செய்யப்பட்ட பின், அந்த நாய்களை பிடித்த இடத்திலேயே விட்டு விடுகின்றனர். கு.க., செய்வதால் மட்டுமே நாய்க்கடியில் இருந்து தப்பி விட முடியுமா? மேலும், ஒருமுறை நாய்களுக்கு கு.க., செய்துவிடும் உள்ளாட்சி அமைப்பினர், அதன் பிறகு, ஆண்டுக்கணக்கில் அப்பகுதியில் எட்டிப் பார்ப்பதில்லை.
---
வீதியில் முகாமிட்டுள்ள தெருநாய்கள்.
இடம்: பருவாய்