Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குடிநீர் திட்ட குழாய் தொடர் உடைப்பு; கொங்கல் நகர மக்கள் வேதனை

குடிநீர் திட்ட குழாய் தொடர் உடைப்பு; கொங்கல் நகர மக்கள் வேதனை

குடிநீர் திட்ட குழாய் தொடர் உடைப்பு; கொங்கல் நகர மக்கள் வேதனை

குடிநீர் திட்ட குழாய் தொடர் உடைப்பு; கொங்கல் நகர மக்கள் வேதனை

ADDED : செப் 10, 2025 09:54 PM


Google News
Latest Tamil News
உடுமலை; குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட 23 ஊராட்சிகளுக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

கொங்கல்நகரம், தொட்டம்பட்டி, புதுப்பாளையம், அனிக்கடவு உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு, பொட்டையம்பாளையம் கிராமத்திலுள்ள நீர் உந்து நிலையத்தில் இருந்து பிரதான குழாய் செல்கிறது.

இதில், கொங்கல்நகரம் அருகே மேடான பகுதியில் பிரதான குழாய் அமைந்துள்ளதால், அடிக்கடி உடைந்து விடுகிறது. திட்டம் பயன்பாட்டுக்கு வந்தது முதல், இப்பிரச்னை தொடர்கதையாக உள்ளது.

நான்கு நாட்களுக்கு முன் அம்மாபட்டி இணைப்பு ரோடு அருகே, குழாய் உடைந்து குடிநீர் வீணாக துவங்கியது. சீரமைப்பு பணி செய்யாததால், உடைப்பு பெரிதாகி வெளியேறும் தண்ணீரின் அளவும் அதிகரித்தது.

அரை ஏக்கருக்கு பாசன நீர் பாய்ந்தது போல, குடிநீர் வீணாகியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள், குடிநீர் வடிகால் வாரியத்தினரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கொங்கல்நகரம் கிராம மக்கள் வேதனையில் உள்ளனர். இப்பிரச்னையால் பிற கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடும் துவங்கியுள்ளது.

அப்பகுதி மக்கள் கூறியதாவது: திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் கொங்கல்நகரம் பகுதியில் உடைவது தொடர்கதையாக உள்ளது.

மேடான பகுதியில், அடிக்கடி உடைப்பு ஏற்படுவதை தடுக்க, தொழில்நுட்பங்களை பின்பற்றி, பிரதான குழாயை மாற்றியமைக்க வேண்டும்.

நிரந்தர உடைப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து, சீரமைக்காவிட்டால், கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாகி விடும்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் மனு அனுப்பியுள்ளோம். இவ்வாறு, தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us