/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குடிநீர் பகிர்வு : கைகொடுக்கிறது மாநகராட்சி : பூண்டியின் 'தாகம்' தணியும் குடிநீர் பகிர்வு : கைகொடுக்கிறது மாநகராட்சி : பூண்டியின் 'தாகம்' தணியும்
குடிநீர் பகிர்வு : கைகொடுக்கிறது மாநகராட்சி : பூண்டியின் 'தாகம்' தணியும்
குடிநீர் பகிர்வு : கைகொடுக்கிறது மாநகராட்சி : பூண்டியின் 'தாகம்' தணியும்
குடிநீர் பகிர்வு : கைகொடுக்கிறது மாநகராட்சி : பூண்டியின் 'தாகம்' தணியும்
UPDATED : ஜூன் 23, 2025 04:47 AM
ADDED : ஜூன் 22, 2025 11:35 PM

திருப்பூர்: திருப்பூர் 2வது திட்டத்தில் பெறப்படும் குடிநீரை, திருமுருகன்பூண்டிக்கு கூடுதலாகவும், காரமடை பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தற்போது மூன்று குடிநீர் திட்டங்களில் கீழ் குடிநீர் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதில் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் இரண்டாவது குடிநீர் திட்டம், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து பெறப்படுகிறது.
மூன்றாவது திட்டத்துக்கான குடிநீர் பவானியில் காவிரி ஆற்றிலிருந்து பெறப்படுகிறது. இந்த திட்டம், புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 4வது திட்டத்துக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆறுதான் ஆதாரமாக உள்ளது. இந்த திட்டம், அம்ரூத் திட்ட நிதியில் மாநகராட்சி சார்பில் நேரடியாகச் செயல்படுத்தப்படும் திட்டம்.
குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் 2வது குடிநீர் திட்டத்தில் பெறப்படும் குடிநீரை வேறு உள்ளாட்சி பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கூட்டுக் குடிநீர் திட்டம் என்ற அடிப்படையில், திருப்பூர் மாநகராட்சி, மூன்று பேரூராட்சிகள் மற்றும் 38 வழியோர கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் இத்திட்டம் செயல்படத் துவங்கியது.
இதில் மொத்தம், 4 கோடி லிட்டர் என்ற அளவில் குடிநீர் பெற்று, திருப்பூர் மாநகராட்சிக்கு 3 கோடி லிட்டரும் வழங்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது.
திட்டம் மூலம் குடிநீர் பெற்று வரும் திருமுருகன் பூண்டி நகராட்சிக்கு 29 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதன் குடிநீர் தேவை 50 லட்சம் லிட்டர் என அதிகரித்துள்ளது.
அப்பகுதிக்கு கூடுதலாக தேவைப்படும் 21 லட்சம் குடிநீரை, திருப்பூர் மாநகராட்சிக்கு வழங்கப்படும் குடிநீரிலிருந்து பகிர்ந்து வழங்க, நகராட்சி நிர்வாக இயக்குனரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
காரமடை ஒன்றியத்தில் உள்ள ஆறு ஊராட்சிகளுக்கும் 38 லட்சம் லிட்டர் குடிநீர் பகிர்ந்தளிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், திருப்பூர் மாநகராட்சி 2வது குடிநீர் திட்டத்தில் பெற்று வரும் குடிநீரில், திருமுருகன் பூண்டிக்கு 21 லட்சம் லிட்டர் மற்றும் காரமடை ஒன்றியத்துக்கு 38 லட்சம் லிட்டர் குடிநீரும் தினமும் பகிர்ந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.