/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போலி குளிர்பானங்கள் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை போலி குளிர்பானங்கள் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
போலி குளிர்பானங்கள் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
போலி குளிர்பானங்கள் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
போலி குளிர்பானங்கள் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
ADDED : மே 10, 2025 02:55 AM
திருப்பூர், : போலி குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்த ஐந்து நிறுவனங்கள் மீது அமலாக்க பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொடாரன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொடாரன் புட்ஸ் நிறுவனம் சார்பில், அந்நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் சுரேஷ் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை சேர்ந்த பொடாரன் நிறுவனம், 56 ஆண்டுகளாக செயல்படுகிறது. அனைத்து பிராண்ட்களுக்குள் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தில் பதிவு செய்து, அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைபிடித்துவருகிறோம்.
பொடாரனின் முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றான 'டிலோ' குளிர்பானம், தென்னிந்தியாவில் பிரபலமாகியுள்ளது.
இந்நிலையில், கோவை, ஈரோடு, சேலம், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த சில நிறுவனங்கள், 'டிலோ' என்கிற பெயரிலும், லோகோவிலும் சிறிய மாறுதல்கள் செய்து, போலி குளிர்பானங்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
எங்கள் நிறுவனம் அளித்த புகாரின் பேரில், அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசார், திண்டுக்கல், கோவை, சேலம், ஈரோடு பகுதிகளில் இயங்கிவந்த ஐந்துபோலி குளிர்பான நிறுவனங்களை கண்டுபிடித்து 'சீல்' வைத்தும், சட்ட நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். இது தொடர்பான வழக்கில் சிலர் கைது செய்துள்ளனர்; தலைமறைவான சிலரை தேடி வருகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.