விசைத்தறியாளருக்கு கூலி குறைப்பதா?
விசைத்தறியாளருக்கு கூலி குறைப்பதா?
விசைத்தறியாளருக்கு கூலி குறைப்பதா?
ADDED : ஜன 07, 2024 12:05 AM

அவிநாசி;தெக்கலுாரில் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
கடந்த 2022ம் ஆண்டு ஜன., மற்றும் பிப்., கூலி உயர்வு சம்பந்தமாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் - கோவை மாவட்ட கலெக்டர்கள் முன்னிலையில் கூலி உயர்வு அமல்படுத்தப்பட்டது.
இதனை ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்றுக் கொண்டு, எக்காரணத்தை கொண்டும் கூலியை குறைக்க மாட்டோம் என உறுதி அளித்ததன் பேரில் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று இன்று வரை விசைத்தறியை இயக்கி வந்தோம்.
தற்போது விசைத்தறி உதிரிபாகங்கள் விலை, கூலி உயர்ந்துள்ளது. ஒப்பந்தத்தை மீறி கடந்த மாதம் முதல் கூலியை குறைத்து கொடுக்க துவங்கியுள்ளனர். இதனால், விசைத்தறியை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இரு மாவட்ட கூட்டு கமிட்டி அமைத்து கலெக்டரிடம் மனு அளிக்கப்படும்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்க செயலாளர் ஆறுமுகம், ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால், செய்தி தொடர்பாளர் சிவகுமார், சண்முகசுந்தரம் மற்றும் விசைத்தறியாளர்கள் பங்கேற்றனர்.