/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணிவாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
ADDED : ஜன 08, 2024 01:27 AM

தேர்தலில் ஓட்டளிப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷன் சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருப்பூர் தெற்கு தொகுதியில், வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று நடந்தது. மாநகராட்சி அலுவலகத்தில் துவங்கிய பேரணி, மங்கலம் ரோடு, நடராஜா தியேட்டர், டவுன்ஹால், அவிநாசி ரோடு, குமார் நகர், 60 அடி ரோடு, பி.என்., ரோடு, புஷ்பா தியேட்டர், மேம்பாலம், குமரன் ரோடு வழியாக மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. பேரணியை துவக்கி வைத்த, மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், தானும் ஹெல்மெட் அணிந்து, சைக்கிள் பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தேர்தல் துணை தாசில்தார் வசந்தா, திருப்பூர் 'ரைடர்ஸ் கிளப்' உறுப்பினர்கள் பங்கேற்றனர்.