/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கண்ணில் ஈரம் காயும் முன்பே தொடரும் விதிமீறல் கண்ணில் ஈரம் காயும் முன்பே தொடரும் விதிமீறல்
கண்ணில் ஈரம் காயும் முன்பே தொடரும் விதிமீறல்
கண்ணில் ஈரம் காயும் முன்பே தொடரும் விதிமீறல்
கண்ணில் ஈரம் காயும் முன்பே தொடரும் விதிமீறல்

மாறிய குடும்பத்தின் 'விதி'
மகாராணியின் கணவர் நாகராஜ் திருப்பூரில் சோடா கடை நடத்தி வருகிறார். கணவரை இழந்த கிருத்திகாவுக்கு15 மற்றும் 13 வயதுகளில் இரு மகன்கள் உள்ளனர். தற்போது, இரண்டு குழந்தைகளுக்கும், நாகராஜ் மட்டுமே ஆதரவு. சராசரி வாழ்க்கை நடத்தி வரும் ஒரு குடும்பத்தின் 'விதி' மாறியதற்கு விதிமீறலே காரணமாகிவிட்டது.
விதிமுறை மீறலேஉயிருக்கு 'எமனானது'
பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, காலை, 6:00 முதல் இரவு, 11:00 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்ற விதிமுறை கடந்த, 2022ம் ஆண்டே கொண்டுவரப்பட்டது.
கானல் நீராகவே கோரிக்கை
பல்லடத்தில், வாகன விபத்துகளால் ஏற்பட்டு வரும் உயிரிழப்பு, பொருள் சேதம் ஆகியவற்றை தவிர்க்க, மேம்பாலம் மற்றும் புறவழிச்சாலை வேண்டும் என, கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாகவே பல்லடம் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஆட்சிக் காலத்திலும் நிறைவேறாத திட்டங்கள், தற்போதைய ஆட்சியிலும் கானல் நீராகவே உள்ளது. இரு உயிர்களை பலி கொடுத்த பின்பாவது, ஆட்சியாளர்கள், அதிகாரிகள் இதுகுறித்து சிந்திப்பார்களா?