/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சேறும், சகதியுமாக மாறிய பாதை தவிக்கும் கிராம மக்கள் சேறும், சகதியுமாக மாறிய பாதை தவிக்கும் கிராம மக்கள்
சேறும், சகதியுமாக மாறிய பாதை தவிக்கும் கிராம மக்கள்
சேறும், சகதியுமாக மாறிய பாதை தவிக்கும் கிராம மக்கள்
சேறும், சகதியுமாக மாறிய பாதை தவிக்கும் கிராம மக்கள்
ADDED : ஜூன் 21, 2025 12:31 AM

உடுமலை : சேறும், சகதியுமாக மாறிய மண்பாதையால், குடியிருப்பிலிருந்து வர மிகுந்த சிரமப்படுவதாக, கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட முத்துசாமி லே-அவுட் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உடுமலை ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெஞ்சமடை அருகே முத்துசாமி லே - அவுட் அமைந்துள்ளது. இந்த குடியிருப்புக்கு செல்லும் வழியில், பி.ஏ.பி., பகிர்மான கால்வாய் செல்கிறது.
கால்வாய் கசிவு மற்றும் மழைக்காலங்களில், தண்ணீர் வெளியேற வழியில்லாமல், குடியிருப்புக்கு செல்லும் மண்பாதையில் தேங்குகிறது. இதனால், பாதை சேறும், சகதியுமாக மாறி, இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குடியிருப்பில் இருந்து மெயின்ரோட்டுக்கு வர, மக்கள் தத்தளிக்கும் நிலை உள்ளது. இது குறித்து ஒன்றிய நிர்வாகத்தினர் ஆய்வு செய்து பாதையை சீரமைக்க வேண்டும்.
மேலும், பல இடங்களில் நன்னீர் தேங்கியுள்ளதால், டெங்கு பரவும் அபாயமும் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.