/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வித்ய விகாசினி பள்ளி 26வது ஆண்டு விழாவித்ய விகாசினி பள்ளி 26வது ஆண்டு விழா
வித்ய விகாசினி பள்ளி 26வது ஆண்டு விழா
வித்ய விகாசினி பள்ளி 26வது ஆண்டு விழா
வித்ய விகாசினி பள்ளி 26வது ஆண்டு விழா
ADDED : ஜன 11, 2024 07:13 AM

திருப்பூர் : திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் ஜெய்நகர், வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 26 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
திருப்பூர் செந்துார் மெடிக்கல் சென்டர் டாக்டர் தீபா சத்யமூர்த்தி குத்து விளக்கு ஏற்றி, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். பள்ளியின் செயலாளர் நகுலன் ப்ரணவ் வரவேற்றார். பள்ளி முதல்வர் அன்பரசு ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளியின் தாளாளர் தர்மலிங்கம், நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார்.
'அப்துல்கலாம் நோக்கம் 2020' அமைப்பின் தலைவர் திருச்செந்துாரன் பங்கேற்று, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கருத்துகளை எடுத்துக் கூறினார். பள்ளி துணை முதல்வர் ஈஸ்வரி நன்றி கூறினார்.
தேசபக்தி, தெய்வ பக்தி, தன்னம்பிக்கை போன்ற பல்வேறு தலைப்புகளில் கலைநிகழ்ச்சிகளை மாணவ, மாணவியர் நடத்தினர்.