Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

ADDED : மே 12, 2025 03:49 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; திருப்பூர், வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் தர்மலிங்கம் கூறியதாவது:

திருப்பூர், குளத்துப்பாளையம், வித்யா விகாஸ் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் பெரும் சாதனை படைத்துள்ளது. தேர்வெழுதிய 110 பேரில், 76 பேர் 500க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் 596 மார்க் பெற்று மாநில அளவில் நான்காவது இடமும், மாவட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றுள்ளது.

தர்சனா 596 மதிப்பெண் பெற்று முதலிடம், 593 மதிப்பெண் பெற்று திவ்யாஸ்ரீ இரண்டாமிடம், தீப்ஷிகா, 592 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 13 பேரையும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் ஆறு பேரையும் சென்டம் பெற வைத்துள்ளார் ஆசிரியர் லோகேஷ். இயற்பியல் பாடத்தில், 5 பேர் சதமடித்தனர். ஆசிரியர் செந்தில்குமார் முயற்சி இதற்கு காரணம்.

இந்த சாதனை புரிய பள்ளின் முதல்வர் தனபாக்கியம், ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணன், ராஜ்குமார் மற்றும் ஆசிரியர் குழுவின் உழைப்பு பாராட்டக் கூடியது. திருப்புதல் தேர்வு என்பது மாணவர் வசதிக்கேற்ப நடத்தப்படுகிறது. ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்தப்படுகிறது. மேலும், ரிலையன்ஸ் எம்பைப் உடன் இணைந்து நீட், ஜே.இ.இ., மற்றும் ஒலிம்பியாட் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us