/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தேசிய நெடுஞ்சாலையில் வாகன 'பார்க்கிங்' தாறுமாறு :விபத்துக்கு அச்சாரம்தேசிய நெடுஞ்சாலையில் வாகன 'பார்க்கிங்' தாறுமாறு :விபத்துக்கு அச்சாரம்
தேசிய நெடுஞ்சாலையில் வாகன 'பார்க்கிங்' தாறுமாறு :விபத்துக்கு அச்சாரம்
தேசிய நெடுஞ்சாலையில் வாகன 'பார்க்கிங்' தாறுமாறு :விபத்துக்கு அச்சாரம்
தேசிய நெடுஞ்சாலையில் வாகன 'பார்க்கிங்' தாறுமாறு :விபத்துக்கு அச்சாரம்
ADDED : ஜன 03, 2024 12:01 AM

பல்லடம்;பல்லடம், கோவை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, காரணம்பேட்டை வரை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இருப்பினும், நகரப் பகுதியில், பல இடங்களில் ரோடு மிகவும் குறுகலாகவே உள்ளது. இதன் காரணமாக, பல்லடம் நகரில் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறுகலாக உள்ள பனப்பாளையம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில், அதிகப்படியான நான்கு சக்கர வாகனங்கள் ரோட்டிலேயே நிறுத்தப்படுகின்றன.
இவற்றால், வாகனங்கள் நெரிசலில் சிக்கி தத்தளித்து செல்வதுடன், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. மேலும், அவசர கதியில் வரும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் நெரிசலில் சிக்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது. போலீசாரும் கண்டுகொள்வதில்லை. குறுகலாக உள்ள இப்பகுதியில், வாகனங்கள் ரோட்டில் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
---
பல்லடத்திலுள்ள என்.எச்., ரோட்டில் தாறுமாறாக பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.