/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பஸ் வராமல் 'வஞ்சனை' ; வஞ்சி நகர் தவிக்கிறது பஸ் வராமல் 'வஞ்சனை' ; வஞ்சி நகர் தவிக்கிறது
பஸ் வராமல் 'வஞ்சனை' ; வஞ்சி நகர் தவிக்கிறது
பஸ் வராமல் 'வஞ்சனை' ; வஞ்சி நகர் தவிக்கிறது
பஸ் வராமல் 'வஞ்சனை' ; வஞ்சி நகர் தவிக்கிறது
ADDED : ஜூன் 26, 2025 11:44 PM

திருப்பூர்; வீரபாண்டி, வஞ்சி நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில், மனு அளித்த பின் கூறியதாவது:
வஞ்சிநகர் அடுக்குமாடி குடியிருப்பில், 1,500 குடும்பங்களில், 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறோம். மூன்று ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு மினி பஸ் இயங்கி வந்தது. ஒரு வாரமாக பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள், தொழிலாளர்கள் தினந்தோறும் சிரமப்படுகின்றனர். உடல் நலம் பாதிக்கப்பட்டோர், மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். வஞ்சி நகர் குடியிருப்பு பகுதி வழியாக, அரசு மற்றும் தனியார் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வஞ்சி நகரில், கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், அங்கன்வாடி கட்டடம் இன்னும் திறக்கப்படவில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளில், 500 குழந்தைகள் உள்ளனர். அங்கன்வாடி மையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். வட்டார போக்குவரத்து துறையினர், பஸ் இயக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.