/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ டீக்கடைக்குள் புகுந்த வேன்; டூ வீலர்கள் கடும் சேதம் டீக்கடைக்குள் புகுந்த வேன்; டூ வீலர்கள் கடும் சேதம்
டீக்கடைக்குள் புகுந்த வேன்; டூ வீலர்கள் கடும் சேதம்
டீக்கடைக்குள் புகுந்த வேன்; டூ வீலர்கள் கடும் சேதம்
டீக்கடைக்குள் புகுந்த வேன்; டூ வீலர்கள் கடும் சேதம்
ADDED : செப் 11, 2025 11:48 PM

திருப்பூர்; திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள டீ கடைக்குள் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வேன் புகுந்து விபத்து ஏற்பட்டது.
திருப்பூர், அம்மாபாளையத்தை சேர்ந்தவர் பாலு, 56; டிரைவர். நேற்று மதியம் காலேஜ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
வேகத்தடை வரும் போது பிரேக் போடவே, கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன், எதிர்பாராத விதமாக ரோட்டோரம் இருந்த டீ கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் வெளியில் நிறுத்தியிருந்த, நான்கு டூவீலர், சைக்கிள் மற்றும் சிக்கன் சில்லி கடை ஆகியன சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.