Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பொதுத்தேர்வுகளில் அபாரம்

ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பொதுத்தேர்வுகளில் அபாரம்

ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பொதுத்தேர்வுகளில் அபாரம்

ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் பொதுத்தேர்வுகளில் அபாரம்

ADDED : மே 18, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
திருப்பூர் ; ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் மாணவர் நதின் 589 மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்றார். இரண்டாமிடத்தில், தரணிகா 581 மதிப்பெண்ணும், ஆஷா ெஹலீனா மூன்றாமிடத்தில், 580 மதிப்பெண்ணும் பெற்றனர். பள்ளியில் 23 பேர் 550க்கு மேலும், 38 பேர் 500க்கு மேலும் மதிப்பெண் பெற்றனர். கணினி அறிவியலில் 3 பேர்; கணினி பயன்பாட்டில், 6 பேர் 100 மதிப்பெண் பெற்றனர். தமிழ் பாடத்தில் 10 பேர் 99 மதிப்பெண் பெற்றனர்.

n 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், கவீந்திர பிரசாத் 493 மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்றார். வர்ஷினி 491 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம்; பாரத் 490 மதிப்பெண்ணுடன் மூன்றாமிடமும் பெற்றனர். மாணவர்கள் 25 பேர் 450க்கு மேலும், 51 பேர் 400க்கு மேலும்மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் ஒருவர்; அறிவியலில் 5 பேர்; சமூக அறிவியலில் 4 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் தமிழில் இருவரும் ஆங்கிலத்தில் 7 பேரும் 99 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

n பிளஸ் 1 பொதுத்தேர்வில், பள்ளி முதலிடம் பெற்ற மாணவி தீப்தி 585 மதிப்பெண்; சபரி நாத் 580 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம்; கவிப்பிரியா 577 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர். மாணவர்கள் 11 பேர் 550க்கு மேல்; 47 பேர் 500க்கு மேலும் மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதத்தில் 3 பேர்; வணிகவியல், வணிக கணிதத்தில் தலா ஒருவர்; கணினி அறிவியலில் 5 பேர், கணினி பயன்பாட்டில் 2 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி தலைவர் தியாகராஜன், செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் சந்திரசேகர், தாளாளர் பாலசுப்ரமணியம், பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

பள்ளியில் தற்போது பிரி கே.ஜி., முதல் பிளஸ் 1 வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்கள், மாணவியருக்கு தனித்தனி விடுதி வசதி உள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us