/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பள்ளிகளில் யோகா பயிற்சி அளிக்கணும்; மீண்டும் தீவிரப்படுத்த வலியுறுத்தல்பள்ளிகளில் யோகா பயிற்சி அளிக்கணும்; மீண்டும் தீவிரப்படுத்த வலியுறுத்தல்
பள்ளிகளில் யோகா பயிற்சி அளிக்கணும்; மீண்டும் தீவிரப்படுத்த வலியுறுத்தல்
பள்ளிகளில் யோகா பயிற்சி அளிக்கணும்; மீண்டும் தீவிரப்படுத்த வலியுறுத்தல்
பள்ளிகளில் யோகா பயிற்சி அளிக்கணும்; மீண்டும் தீவிரப்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜன 06, 2024 12:28 AM
உடுமலை;அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கு அடிப்படை யோகா பயிற்சி அளிக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களை மனதளவில் ஒருநிலைப்படுத்தவும், கல்வி மற்றும் இணை செயல்பாடுகளில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும், முன்பு அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கு யோகா பயிற்சி, சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது.
இருப்பினும், பயிற்சி கற்றுக்கொடுக்க துவங்கிய போது அளிக்கப்பட்ட முக்கியத்துவம் நாளைடைவில் குறைந்து, தற்போது முற்றிலுமாக காணாமல் போய்விட்டது.
ஒரு சில பள்ளிகளில் மட்டுமே, ஆசிரியர்களின் விருப்பத்தின் அடிப்படையில், மாணவர்களுக்கு யோகா மற்றும் தியான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
தற்போது மாணவர்கள் பல்வேறு சூழல்களால், தவறான வழிகளில் செல்வது, வன்முறையில் ஈடுபடுவது, கவனச்சிதறல் என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
மாணவர்களின் சிந்தனையை மேம்படுத்துவதற்கும், மன ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கும், யோகா மற்றும் தியான பயிற்சிகளும், கல்வி இணைசெயல்பாடுகளின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.
இதற்கான முறையான நடவடிக்கையை, அரசு எடுக்க வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்களுக்கு யோகா கற்பிக்க, ஆசிரியர்களுக்கு அடிப்படை பயிற்சி கல்வித்துறையின் முன்பு சார்பில் நடத்தப்பட்டது. அதன் வாயிலாக, மாணவர்களுக்கு பயிற்சியளித்தோம்.
ஆனால், முறையான பயிற்சி அளிப்பதற்கு, தற்காலிகமாக யோகா பயிற்சிகளை வழங்க கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
உளவியல் ரீதியாகவும், குடும்ப சூழ்நிலையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும், இப்பயிற்சி மிகவும் பயனுள்ள ஒன்று. இருப்பினும், இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் உள்ளது.
இப்பயிற்சிகளில் பங்கேற்க, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், கல்வித்துறை போட்டிகளை நடத்த வேண்டும். மீண்டும் பள்ளிகளில் யோகா பயிற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.