/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கொத்தமல்லியை பாதித்த மழை; நிவாரணம் வழங்க வலியுறுத்தல்கொத்தமல்லியை பாதித்த மழை; நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
கொத்தமல்லியை பாதித்த மழை; நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
கொத்தமல்லியை பாதித்த மழை; நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
கொத்தமல்லியை பாதித்த மழை; நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
ADDED : ஜன 12, 2024 10:39 PM

உடுமலை;மழையால் பாதித்த பயிர்கள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என, குடிமங்கலம் வட்டார விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குடிமங்கலம் வட்டாரத்தில், வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, பல ஆயிரம் ஏக்கரில், கொத்தமல்லி மற்றும் கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்பட்டது.
களிமண் விளைநிலங்களில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இவ்வகை சாகுபடிக்கு விதைப்பு செய்கின்றனர். விதைப்புக்கு பிறகு, பயிரின் வளர்ச்சி தருணத்தில், போதிய மழை பெய்யவில்லை.
மாறாக, பயிர்கள் பூ விட்டு, அறுவடைக்கு தயாராகி வந்த நிலையில், இரு நாட்களுக்கு முன் பெய்த மழையால், மானாவாரி சாகுபடி கடுமையாக பாதித்துள்ளது. பலத்த மழையால், கொத்தமல்லி செடிகள் அடியோடு சாய்ந்து விட்டது.
ஏக்கருக்கு, 13 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இச்சாகுபடிக்கு செலவிட்டுள்ளனர். தற்போது செடிகளிலுள்ள, கொத்தமல்லி தானியத்தையும் அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: பருவம் தவறி பெய்த மழையால், மானாவாரி சாகுபடியில் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கொத்தமல்லி செடிகள் அடியோடு சாய்ந்து விட்டது; கொண்டைக்கடலை செடிகளில் பூக்கள் முழுவதுமாக உதிர்ந்து விட்டது.
ஆண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும், சாகுபடியும் கைவிட்டுள்ளது. திடீர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்துறையினர் இணைந்து ஆய்வு நடத்தி, நிவாரணத்துக்கு பரிந்துரைக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.