/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'அப்டேட்' செய்யப்பட்ட மாநகராட்சி இணைய தளம் 'அப்டேட்' செய்யப்பட்ட மாநகராட்சி இணைய தளம்
'அப்டேட்' செய்யப்பட்ட மாநகராட்சி இணைய தளம்
'அப்டேட்' செய்யப்பட்ட மாநகராட்சி இணைய தளம்
'அப்டேட்' செய்யப்பட்ட மாநகராட்சி இணைய தளம்
ADDED : ஜூன் 28, 2025 11:53 PM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் பயன்பாட்டில் உள்ளது. இதில், மாநகராட்சி குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. மாநகராட்சி கமிஷனர் குறித்த விவரம் 'அப்டேட்' செய்யப்படாமல் இருந்தது. கமிஷனராகப் பணியாற்றி கடந்த மாதம் ஓய்வு பெற்ற ராமமூர்த்தியின் படம் மற்றும் பெயர், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் என்ற விவரம் இந்த இணைய தளத்தில் இருந்தது.
இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து, முந்தைய கமிஷனர் ராமமூர்த்தியின் பெயர் மற்றும் படம் அகற்றப்பட்டு, புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனர் அமித்தின் படம் மற்றும் பெயர் தற்போது அதில் இடம் பெற்றுள்ளது.