/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பாதுகாப்பற்ற சூழல்; அரசு பள்ளியில் நீதிபதிகள் ஆய்வுபாதுகாப்பற்ற சூழல்; அரசு பள்ளியில் நீதிபதிகள் ஆய்வு
பாதுகாப்பற்ற சூழல்; அரசு பள்ளியில் நீதிபதிகள் ஆய்வு
பாதுகாப்பற்ற சூழல்; அரசு பள்ளியில் நீதிபதிகள் ஆய்வு
பாதுகாப்பற்ற சூழல்; அரசு பள்ளியில் நீதிபதிகள் ஆய்வு
ADDED : பிப் 10, 2024 11:31 PM

பல்லடம்:'தினமலர்' செய்தி எதிரொலியாக, பல்லடம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், நீதி பதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பல்லடம், மங்கலம் ரோட்டில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 600க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பிடம் சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டது.
இதனால், பள்ளியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாகவும், இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் எனவும், சமீபத்தில், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையறிந்த, பல்லடம் ஜே.எம். கோர்ட் நீதிபதிகள் சித்ரா, மாலா ஆகியோர் அரசு ஆண்கள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.
நீதிபதிகள் கூறியதாவது:
பள்ளியில் இரவு காவலர் இல்லாததால் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இரவு காவலரை நியமிக்க வேண்டும். மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பிடத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். தினசரி, குறைந்தபட்சம் ஆயிரம் லிட்டர் குடிநீராவது மாணவர்களுக்கு தேவைப்படும்.
பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டி போதாது. கூடுதல் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். பள்ளி வளாகத்துக்குள் சமூக விரோதிகள் நடமாட்டம் இல்லாததை போலீசார் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ஆய்வின்போது, ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் உள்ளிட்டோர் உடனடிருந்தனர்.