/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அடம் பிடித்த அதிகாரியால் மீன் பங்கு பிரிப்பதில் சிக்கல் அடம் பிடித்த அதிகாரியால் மீன் பங்கு பிரிப்பதில் சிக்கல்
அடம் பிடித்த அதிகாரியால் மீன் பங்கு பிரிப்பதில் சிக்கல்
அடம் பிடித்த அதிகாரியால் மீன் பங்கு பிரிப்பதில் சிக்கல்
அடம் பிடித்த அதிகாரியால் மீன் பங்கு பிரிப்பதில் சிக்கல்
ADDED : ஜூலை 02, 2025 08:28 AM

உடுமலை; தமிழக மீன் வளர்ச்சிக்கழகத்தால், அமராவதி அணையில், ஆண்டு குத்தகைக்கு தனியார் மீன் பிடிக்கின்றனர். இதில், மூன்றில் ஒரு பங்கு மீன் வளர்ச்சிக்கழக மீன் விற்பனை அங்காடிகளுக்கும், இரு பங்கு அணையிலுள்ள மீன் பண்ணையிலும், அரசு நிர்ணயித்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். அதற்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது.
மீன் வளர்ச்சி கழகத்திற்கு ஒதுக்கப்படும் ஒரு பங்கு மீன், நகர ஸ்டால்களுக்கு கொண்டு செல்லப்படும். நேற்று முன்தினம், 7 கிலோ கட்லா, தலா ஒரு கிலோ கொண்ட இரு ரோகு மீன்கள் மட்டுமே கிடைத்தது. மீன் குறைவாக இருந்த நிலையிலும், மீன் வளர்ச்சிக்கழக அதிகாரி, 'எங்களுக்கான பங்கு மீன் கண்டிப்பாக வேண்டும்' என, அடம் பிடித்தார்.
ஆனால், 9 கிலோவில், 3 கிலோ மீன் வழங்க வேண்டும். பங்கு பிரிக்க முடியாமல், பல மணி நேரம் திணறிய நிலையில், இறுதியில், 7 கிலோ மீனை இரண்டாக வெட்டிபங்கு கொடுத்தனர்.பங்கு கேட்ட அதிகாரிக்கு, கழிவுகளையும் சமமாக பிரித்து வழங்கினர். இரு துண்டாக்கி,'முழு மீன் மட்டுமே விற்க வேண்டும்' என்ற விதி மீறப்பட்டுள்ளது.