/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி ஊர்வலம்விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி ஊர்வலம்
விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி ஊர்வலம்
விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி ஊர்வலம்
விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி ஊர்வலம்
ADDED : ஜன 04, 2024 12:59 AM

திருப்பூர்: மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திருப்பூரில் நேற்று நடந்த அமைதி ஊர்வலத்தில் ஏரா ளமானோர் திரண்டனர்.
திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மவுன ஊர்வலத்தில் அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் துவங்கிய ஊர்வலம், குமரன் சாலை வழியாக, மாநகராட்சி அலுவலகம் வரை சென்றது. அதன்பின், விஜயகாந்த் படத்துக்கு, அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.