ADDED : மே 18, 2025 10:12 PM
உடுமலை ; அரசு நடுநிலைப்பள்ளிகளில், மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளது.
கல்வியாண்டு, 2024-25 நிறைவடைந்து, ஜூன் முதல் புதிய கல்வியாண்டு துவங்குகிறது. மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்வதற்கு, அவர்களுக்கான மாற்றுச்சான்றிதழ் பள்ளி கல்வி மேலாண்மை இணையதளத்தில் தயார்படுத்தப்படுகிறது.
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் சுற்றுப்பகுதி அரசு நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்கள் உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளிகளில் சேர்வதற்கு, தலைமையாசிரியர்கள் மாணவர்களின் பெற்றோரிடம் மாற்றுச்சான்றிதழ் வினியோகிக்க துவங்கியுள்ளனர்.