Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'எண்ணும் எழுத்தும்' திட்டம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

'எண்ணும் எழுத்தும்' திட்டம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

'எண்ணும் எழுத்தும்' திட்டம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

'எண்ணும் எழுத்தும்' திட்டம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

ADDED : ஜூன் 12, 2025 07:09 AM


Google News
திருப்பூர் : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எண்ணும், எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2025 -- 2027ம் கல்வியாண்டு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், எண்ணும், எழுத்தும் சார்ந்த, 2025 - 2026ம் கல்வியாண்டுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் (ஒன்று முதல், மூன்றாம் வகுப்பு வரை); தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் (நான்கு முதல் ஆறாம் வகுப்பு வரை) முதல் பருவத்துக்கான பாடப்பொருள் உருவாக்கியுள்ளது.

இதற்காக ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான பயிற்சிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

வட்டார ஆசிரியர் பயிற்றுநர்கள் கூறியதாவது:

தொடக்க கல்வியில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்ய எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்வி கற்கும் ஆர்வத்தை துாண்டுதல், குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவு செய்தல்; கற்றல் அடைவுகளை குழந்தைகளை பெறும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

விளையாடலாம் வாங்க, மின்னும் வைரங்கள், சொற்பொட்டியல் விரும்பிச் செய்வோம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்தும் விளக்கப்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us