/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வீதிகளின் வழித்தடம் ஆக்கிரமிப்பு: வாகன ஓட்டுநர்கள் திணறல் வீதிகளின் வழித்தடம் ஆக்கிரமிப்பு: வாகன ஓட்டுநர்கள் திணறல்
வீதிகளின் வழித்தடம் ஆக்கிரமிப்பு: வாகன ஓட்டுநர்கள் திணறல்
வீதிகளின் வழித்தடம் ஆக்கிரமிப்பு: வாகன ஓட்டுநர்கள் திணறல்
வீதிகளின் வழித்தடம் ஆக்கிரமிப்பு: வாகன ஓட்டுநர்கள் திணறல்
ADDED : ஜன 05, 2024 11:08 PM
உடுமலை:வணிகம் நிறைந்த நகர வீதிகளில், போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் அகற்ற துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட கல்பனா ரோடு, சீனிவாசா, பசுபதி உள்ளிட்ட வீதிகளில், அதிகளவில் வணிகக்கடைகள் உள்ளன. அதிகப்படியான மக்கள், இப்பகுதிக்கு, தினமும் வந்து செல்கின்றனர்.
ஆனால், ஆங்காங்கே நிறுத்தப்படும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல், வீதிகளை ஆக்கிரமித்தவாறே, ஒவ்வொரு கடைகளும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
இது ஒருபுறமிருக்க, நகர வீதிகளில், ரோட்டின் திருப்பங்களில், வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அவ்வழித்தடத்தில் வேகமாக இயக்கப்படும் வாகனங்கள், விபத்தில் சிக்குகின்றன.
வீதிகளில், நடைபாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும், கிடப்பில் போடப்பட்டுள்ளது. சில வீதிகளில் உள்ள நடைபாதை, ஆக்கிரமிப்பில் உள்ளது.
செய்வதறியாது திகைக்கும் மக்கள், வாகனங்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியவாறு, ரோட்டோரத்தில் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
மக்கள் கூறுகையில், 'தள்ளுவண்டிக் கடைக்காரர்களின் செயல்பாடும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. ரோட்டை ஆக்கிரமிக்கும் கடைக்காரர்களால், அவசர தேவைக்காகச்செல்வோர் பாதிக்கின்றனர். அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதும், அலட்சியம் போன்ற காரணங்களால், இத்தகைய விதிமீறல்கள் தொடர்கின்றன,' என்றனர்.