/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மங்கலம் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்மங்கலம் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்
மங்கலம் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்
மங்கலம் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்
மங்கலம் ரோட்டில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜன 11, 2024 07:12 AM

திருப்பூர் : மங்கலம் ரோடு, சிறுபாலம் கட்டும் பணி காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க வாகனப் போக்குவரத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர், மங்கலம் ரோடு, அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ரோட்டில் தற்போது மழை நீர் வடிகால் ரோட்டைக் கடந்து செல்லும் வகையில் அமைந்துள்ள சிறுபாலங்களும் இத்திட்டத்தில் அகலப்படுத்தும் வகையில் பணி நடக்கிறது. அவ்வகையில், இந்த ரோட்டில் தற்போது நான்கு இடங்களில் இது போன்ற சிறு பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
பரபரப்பான வாகனப் போக்குவரத்து நிறைந்த ரோடாக இது உள்ளது. இதனால், எந்நேரமும் அதிகளவிலான வாகனங்களும், பொதுமக்களும் இந்த ரோட்டைக் கடந்து செல்கின்றனர்.
தற்போது சிறுபாலம் கட்டுமானப் பணியால், இப்பகுதிகளில் ரோட்டின் ஒரு பகுதியில் மட்டுமே வாகனங்கள் செல்ல வழியுள்ளது. இதனால், பெரும்பாலான நேரங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில், செய்தி வெளியானது.
இதையறிந்து, அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்த மாநகர போக்குவரத்து போலீசார் மாற்று ஏற்பாடு செய்துள்ளனர். பாரப்பாளையம் பிரிவு அருகே, சிறுபாலம் கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில், போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
திருப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் மட்டும், நேராக வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு நோக்கிச் செல்லும் வாகனங்கள் பாரப்பாளையம் பள்ளி அருகிலிருந்து தெற்கு நோக்கிச் சென்று, குமரன் கல்லுாரி அருகே, எஸ்.ஆர். நகர் பகுதி வழியாக மீண்டும் மங்கலம் ரோட்டை அடையலாம். இதனால், போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.