/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கச்சேரி வீதியில் தொடரும் போக்குவரத்து நெரிசல் கச்சேரி வீதியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
கச்சேரி வீதியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
கச்சேரி வீதியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
கச்சேரி வீதியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
ADDED : மார் 25, 2025 10:15 PM
உடுமலை; உடுமலை கச்சேரி வீதியில், தாலுகா அலுவலகம், கோர்ட், கிளைச்சிறை, சார்நிலை கருவூலம், தபால் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம் என முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன.
பல்வேறு பணிகளுக்காக இந்த அலுவலகங்களுக்கு வருபவர்கள், ரோட்டின் இருபுறங்களிலும் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துகின்றனர்.
இதே போல், தாலுகா அலுவலக வளாகத்திலும், வாகனங்கள் முறையாக நிறுத்தப்படுவதில்லை.
இதனால், கச்சேரி வீதியிலும், தாலுகா அலுவலக வளாகத்திலும், நெரிசல் தொடர்கதையாக உள்ளது. தளி ரோட்டிலிருந்து, அரசு மருத்துவமனைக்கு இந்த ரோட்டின் வழியாகவே, ஆம்புலன்ஸ் உட்பட வாகனங்கள் செல்கின்றன. அப்போது, போதிய இடமின்றி, நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், அனைத்து அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைந்து, ஆலோசித்து, கச்சேரி வீதியில், நெரிசலை தவிர்க்க, 'பார்க்கிங்' விதிமுறைகளை அமல்படுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.